தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!

மூச்சு திணறல் காரணமாக நவ.13 ஆம் தேதி முண்டியபாக்கம் மருத்துவமனையில் அமைச்சர்  துரைக்கண்ணு அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சருக்கு கொரோனா தொற்று காரணமாக 90 விழுக்காடு நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு எக்மோ உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை  நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இன்று வெளியான மருத்துவமனை அறிக்கையில், அமைச்சரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், முக்கிய உறுப்புகள் தொடர்ந்து செயல்பட வைப்பது சவாலாக உள்ளது எனவும் தெரிவிக்கபட்டிருந்தது. இந்நிலையில் சற்று முன் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72. மூன்று முறை தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரான தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு 2016 ஆம் ஆண்டு வேளாண்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.தற்போது அதிமுகவின் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகிந்து வருகிறார்.