தமிழகம் முழுவதும் 200 நாட்கள் தேர்தல் பரப்புரை பயணம் செய்ய உதயநிதி திட்டம்!

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஏற்கெனவே பாஜக வேல் யாத்திரை மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக நடிகர் கமல்ஹாசனும் தேர்தல் பரப்புரையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 200 நாட்கள் தேர்தல் பரப்புரை பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். 

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் வருகிற 20ஆம் தேதி தேர்தல் பரப்புரை பயணத்தை தொடங்கும் உதயநிதி ஸ்டாலின், திருச்சியில் நிறைவு செய்கிறார். பத்து நாட்கள் ஓய்வு என்ற அடிப்படையில் 200 நாட்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார்.