“தமிழகத்தை சீரமைப்பதே எனது இலக்கு” – கமல்ஹாசன்

தனது பிறந்தநாளையொட்டி கமல்ஹாசன் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தை சீரமைக்கும் நல்ல காரியத்தில் தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதை மக்கள் அறிந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். “நான் துணிந்த பின் தயங்குவதில்லை, தடைகளை கண்டு மயங்குவதில்லை, எதிர்ப்பு கண்டு கலங்குவதில்லை” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

மக்கள் நலனே என் வாழ்க்கையின் நோக்கம் எனவும், தமிழகத்தை சீரமைப்பதே தமது இலக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார். கொரோனா சூழல் கொண்டாட்டத்திற்கு உரியது அல்ல என்றும் தெரிவித்துள்ள அவர், தனது பிறந்த நாளை நற்பணி தினமாக அறிவித்து மக்களுக்கு நற்காரியங்களை செய்யுங்கள் எனவும் கமல்ஹாசன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.