தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வடதமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தள்ளது. அதேநேரம், மாலத்தீவு, கேரள கடற்பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.