தமிழகத்தில் 6 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,03,290  ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 66 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,47,335 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 6,03,290 பேரில்,  3,64,129 பேர் ஆண்கள், 2,39,130 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 31 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 74,41,697 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 87,647 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.சென்னையில் 1289 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,68,689 ஆக உயர்ந்துள்ளது.