தமிழகத்தில் 13 மாணவர்கள் இறந்ததற்கு திமுகதான் காரணம்: முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தின்போது, மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திமுக இருந்த வரை, தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை என கூறினார். அதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு யார் ஆட்சியில், எப்போது வந்தது என ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அந்த தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என பதில் சொல்லுங்கள் எனவும் கேள்வி எழுப்பினார். 

நீட் தேர்வை மீண்டும் கொண்டு வருவதற்கு யார் காரணம் என வினவிய முதல்வர், வெளிநடப்பு செய்த காங்கிரஸ் கட்சியினரையும் சாடினார். மேலும், நீட் காரணமாக 13 மாணவர்கள் இறந்ததற்கு, திமுகவே காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டினார்.