தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கோவிட்-19

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 7,14,235 ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 2,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை, 7,14,235 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 695 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,97,77 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 42,296 ஆகஅதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,029 பேர், கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அந்நோயிலிருந்து  மீண்டவர்களின் எண்ணிக்கை, 6,75,518 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70 ஆயிரத்து 687 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3 புள்ளி 63 சதவீதம் பேருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 30ந்தேதி 6.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 70,687 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்களில் 3.63 சதவீதம் பேருக்கே தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி 6.65 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.