தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,776 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,69,256 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 89 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,925 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,930 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 4,10,116 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 51,215 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 4,69,256 பேரில், 2,83,073 பேர் ஆண்கள், 1,86,154 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 53,79,011 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 80,503 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 949 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,42,603 ஆக உயர்ந்துள்ளது.