தமிழகத்தில் கொரோனா தொற்று இறப்பு விகிதம் 1.3% ஆக குறைவு! – அமைச்சர் விஜயபாஸ்கர்

கிண்டி கிங் கொரோனா மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  நாட்டிலேயே கிங் வளாகத்தில் தான் நான்கரை லட்சம் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். தினசரி 5,000 பேருக்கு பரிசோதனை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் என்ற மகத்தான ஆயுதம் உள்ளதாகக் கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், மாஸ்க் பயன்படுத்தினால் நிச்சயம் தொற்றை குறைக்க முடியும் என்றார். கோவிசீல்டு தடுப்பூசியை பரிசோதனை முறையில் எடுத்துக் கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவும் இல்லை என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அதே நேரம், தடுப்பூசியை மட்டுமே நம்பி இல்லாமல் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.