தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,33,969 ஆக உயர்வு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,418 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,74,172 பேர் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது 52,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இதுவரை தொற்று உறுதியான 4,33,969 பேரில், 2,62,223 பேர் ஆண்கள், 1,71,717 பேர் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 29 பேர் ஆகும். தமிழகம் முழுவதும் இதுவரை 48,88,312 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 75,165 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் 1,084 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,36,697  ஆக உயர்ந்துள்ளது.