தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடன், கட்டுப்பாடுகளுடனும் அக்டோபர் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்து வருகிறது.

இந்நிலையில் மருத்துவ நிபுணர்கள், மாவட்ட ஆட்சியர்கள், பொது சுகாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார், அதன் அடிப்படையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளையும், கட்டுப்பாடுகளுடனும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவதற்காக அக்டோபர் 1ம் தேதி முதல் பெற்றோர்களின் அனுமதியை பெற்று மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என்ற அறிவிப்பாணையை நிறுத்தி வைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது.