தமிழகத்தில் எப்போது திரையரங்குங்கள் திறக்கப்படும் ? – கடம்பூர் ராஜூ பதில்

சென்னை கிண்டியிலுள்ள ரேஸ் கிளப்பில் முன்னாள் இந்தியன் வங்கி சேர்மனும் தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவருமான கோபாலகிருஷ்ணன் நினைவு அஞ்சலி மற்றும் புகைப்பட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரையரங்குகளை திறப்பது தொடர்பாக நாளை முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறினார். அடுத்த இரண்டு நாட்களில் திரையரங்கு உரிமையாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்துவார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

திரைத்துறைக்கு பல்வேறு தளர்வுகள் தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் நிதி உதவியையும் அரசு வழங்கியுள்ளதாகவும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டார்.மத்திய அரசின் வழிகாட்டுதல் கொடுத்த பிறகு புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது.

திரையரங்கு உரிமையாளர்களுக்கு தான் வழிகாட்டு நெறிமுறைகளில் உள்ள சிரமங்கள் தெரியும் எனவே அவர்களுடன் ஆலோசித்த பிறகு திரையரங்குகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.நாளை அல்லது இரு தினங்களுக்குள் திரையரங்க உரிமையாளர்கள் ஒரே நேரத்தில் அழைத்து முதல்வருடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கவுண்டர் டிக்கெட் தவிர்த்து ஆன்லைன் டிக்கெட் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

நாட்டு மக்கள் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று தான் எதிர்பார்த்தார்கள் தேர்தலில் வெற்றி பெற போவது அதிமுக தான் அதனால் திமுக மற்றும் கமல் சீமான் உள்ளிட்ட மற்ற கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என கடம்பூர் ராஜு கூறினார்.