தமது இணைய தளத்தில் ஏற்பட்ட தரவு மீறலால் 150 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டொராண்டோ மருத்துவமனை வலையமைப்பு தெரிவித்துள்ளது

டொரொன்டோ மருத்துவமனை இணைய தள தரவு மீறலால் 150 நோயாளிகளின் மருத்துவ பதிவுகள் மூன்றாம் தரப்பினருக்கு சட்டவிரோதமாக கைமாற்றம் செய்யப்பட்டதாகவும் அதை பயன் படுத்தி நோயாளிகளிடம் இருந்து பணம் பறிக்கும் முயற்சிகள் நடந்ததாகவும் மருத்துவமனை வலையமைப்பு தெரிவித்துள்ளது

Unity Health Toronto  என்ற அமைப்பின் கருத்துப்படி, இந்த சம்பவத்தில் St. Michael’s மருத்துவமனையின் மருத்துவர்கள்  மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவ குறிப்புகளை பதிவேற்றம் செய்யும் நிறுவனமான Nuance Communications முன்னாள் ஊழியர் ஒருவரே இந்த தரவு மீறலுடன் சம்பந்தப்பட்டதாகக் கூறினார்.

மே மாதத்தில் இந்த விஷயத்தை அறிந்ததாகவும், கடந்த வாரம் நோயாளிகளுக்கு அறிவித்ததாகவும் மருத்துவமனை வலையமைப்பு தெரிவித்துள்ளது.

“நாங்கள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம் மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளுக்கும் அறிவித்துள்ளோம்” இதனால் பாதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளிடமும் தாம் மன்னிப்பு கோருவதாகவும்  Unity Health Toronto தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்

Nuance Communications நிறுவனத்தின் ஊழியர் தான் பதவியினை விட்டு விலகிய பின்பும் நோயாளிகளின் தரவுகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக  Unity Health நிறுவனம் தெரிவித்தது 

பதிவுகளில் நோயாளியின் பெயர்கள், மருத்துவ வரலாறு, நோயறிதல்கள் மற்றும் சிகிச்சைகள் இருந்தன. நிதி அல்லது சுகாதார காப்புறுதி தகவல்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை அறியப்படுகிறது

இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக நம்பப்படுகிறது, இதை அடுத்து Nuance  நிறுவனம் இந்திய காவல் துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து இந்த தகவல் மீறலுக்கு பயன்படுத்தப்பட்ட கணனி காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டது