தன்னை கடித்த பாம்பை அடித்து கையோடு மருத்துவமனைக்கு கொண்டு வந்த விவசாயி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தேன்குணம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஐயப்பன் என்பவர், வழக்கம்போல் நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கட்டுவிரியன் பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து ஐயப்பன் அதே இடத்தில் சுருண்டு கீழே விழுந்துள்ளார். அங்கு அவரோடு வேலை செய்தவர்கள், அவரை கடித்த பாம்பினை அடித்து கொன்றனர்.  

பின்னர் பாம்பினை எடுத்துக்கொண்ட உறவினர்கள், விவசாயி ஐயப்பனை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பித்துள்ளனர். இதனையடுத்து விவசாயி ஐயப்பனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.