தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ததுக்காக மார்க்கம் நபர் மன்னிப்பு கோரினர்

கடந்த வருடம் ஜூலை மாதம் மார்க்கம் பகுதியில் தனது நான்கு குடும்ப உறுப்பினர்களை கொலைசெய்த 24 வயதுடைய Menhaz Zaman தான் செய்த கொலைக்குற்றத்துக்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்பதாக நேற்று நடந்த தீர்ப்பு வழங்கும் விசாரணையின் பொது தெரிவித்தார் 

Menhaz Zaman செய்த இந்த கொலை குற்றத்துக்கு அவருக்கு 40 வருட சிறை தண்டனை வழங்க வேண்டும் என சட்டத்தரணிகள் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர் மேலும் இந்த 40 வருட சிறை தண்டனையில் Parole அடிப்படியில்

தண்டனை காலத்தை குறைக்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தனர்

தன்னுடைய பெற்றோர்கள் சகோதரி மற்றும் பாட்டி(Grandma ) ஆகியோரை கொலை செய்ததுக்காக  Menhaz Zaman  தான்  மூன்று முதல் தர கொலை குற்றசாட்டுகளையும் ஒரு இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டையும் ஒத்துக்கொள்வதாக கடந்த மாதம் தெரிவித்து இருந்தார்

தன்னுடைய இந்த செயலால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப உறவினர்கள்,நண்பர்கள் அனைவரிடமும் தான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்பதாக அவர் மேலும் தனது மன்னிப்பு உரையில் தெரிவித்தார்

நீதிபதி Michelle Fuerst தனது தீர்ப்பினை வரும் நவம்பர் மாதம் 2ம் திகதி வழங்குவர்