தனுஷ் பட நடிகர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் !

சண்டைக் காட்சியில் படுகாயம் பிரபல நடிகர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டதால்  பரபரப்பு...! | Malayalam actor tovino thomas met with accident while  shooting for new movie kala - The ...

நடிகர் டொவினோ தாமஸ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் ஆனார்.

தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் இன்று ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். ’’கள’’ படத்தின் படப்பிடிப்பின் போது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக டொவினோவுக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த டொவினோவை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலில் அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள் பின்னர் அவருக்கு ஏற்பட்ட படுகாயம் காரணமாக உடனடியாக ஐசியூவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகர் டொவினோக்கு காயம் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வரும் டொவினோ தாமஸை மூன்று வாரங்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டுமெனக் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஓய்வுக்குப் பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.