தனுஷ் ஒரு படத்துக்கு என்ன சம்பளம் வாங்குவாரோ… அதை சம்பாதித்துக் கொடுத்த ரௌடி பேபி பாடல்!

தனுஷ் நடிப்பில் உருவான மாரி 2 படத்தில் இடம்பெற்றிருந்த ரௌடி பேபி பாடல் இதுவரை இணையத்தில் 96 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

Rowdy Baby' song from 'Maari 2' crosses 200 million views! | Tamil Movie  News - Times of India

கடந்த சில வருடங்களில் பெரியவர்கள் முதல் சின்ன குழந்தைகள் வரை அனைவர் மனதிலும் இடம்பெற்ற பாடல் என்றால் அது ரௌடி பேபிதான். அந்த பாடல் வரிகளும், நடன அசைவுகளும் சேர்ந்து ஏகோபித்த வரவேற்பைக் கொடுத்தன. இதனால் யுடியூபில் இதுவரை 96 கோடி பேரால் அந்த பாடல் பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாரி 2 படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் ஒரு படத்துக்கு என்ன சம்பளம் வாங்குவாரோ அந்த அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விரைவில் இந்த பாடல் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து யுவன், சாய் பல்லவி மற்றும் பிரபுதேவா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்க உள்ளாராம் தனுஷ்.