தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கோவிட் -19 வைரஸ் நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று அண்மையில் வீடு திரும்பினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அதே வைத்தியசாலையில் கடந்த 6-ந் திகதி அனுமதிக்கப்பட்டார்.

 2-ம் கட்ட வைத்திய பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்திருந்தார். 3 நாட்கள் வைத்திய சிகிச்சை பெற்ற நிலையில், வைத்தியசாலையில் இருந்து விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.