“தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் செங்கோட்டையன்

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2,505 பள்ளிகளுக்கு இந்த ஆண்டிற்கான அனுமதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பள்ளிகளில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமானது உரிய பாதுகாப்புடன் நடைபெறும் என்றும், பள்ளிகள் திறப்பதற்கு பெற்றோர் ஆர்வம் காட்டாதபட்சத்தில், இதுகுறித்து இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 

பள்ளிகள் திறக்கப்படாத பட்சத்தில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதிக கட்டணம் வசூல் தொடர்பாக, புகார்கள் எதுவும் வரவில்லை என்றும், அவ்வாறு புகார்கள் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.