தனிமைப்படுத்தல் நிலையத்தில் தற்கொலை செய்த இளைஞன்

கட்டுநாயக்க பில்லவத்தை பிரதேசத்தில் அமைந்து சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர் ஜாஎல பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய திருமணமாகாத இளைஞன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த இளைஞன் பன்னல பிரதேசத்தில் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் அங்கு பணியாற்றிய மற்றுமொருவர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதனால் இந்த இளைஞன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக கடந்த 10ஆம் திகதி அழைத்து வரப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தலில் இருந்த இளைஞன் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பின்னர் அவரது சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மனவிரக்தியில் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.