தனிமைப்படுத்தப்பட்டன களுத்துறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள்

களுத்துறை மாவட்டத்தின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பண்டாரகம பொலிஸ் பிரிவின் போகஹவத்தை, பமுணுமுல்ல, கிரிமன்துடாவ, கோராவல, அடலுகம மேற்கு, கலஹாமண்டிய ஆகிய 7 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ராகமை, வத்தளை, பேலியகொடை மற்றும் களனி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.