தனது வைத்தியசாலையின் ஒரு பகுதியில் Covid-19 தொற்று பரவியதை Sunnybrook வைத்தியசாலை உறுதிப்படுத்தியது

மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு வெள்ளிக்கிழமை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.அதன்பின்னர் அவர்கள் மேலும் நான்கு  பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்து, அந்த நோயாளிகளில் இருவர் மருத்துவமனையில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். யூனிட்டில் உள்ள மற்ற நோயாளிகள் எவருக்கும் வைரஸ் இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட பிரிவு தற்போது நோயாளர்களின் பார்வைக்கு மூடப்படுள்ளது

மருத்துவமனை அதிகாரிகளின்கருத்துப்படி , ஒரு தொற்று அறிவிக்கப்பட்டால், பாதிக்கப்பட்ட நோயாளிகள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுவார்கள், மேலும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வைக்கப்படுகின்றன. இதில் யூனிட்டில் உள்ள ஊழியர்களும் அடங்குவர். கடுமையான முன்னெச்சரிக்கைகள், அதிகரித்த கண்காணிப்பு, சோதனை மற்றும் மேம்படுத்தப்பட்ட துப்புரவு நடவடிக்கைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையின் தொற்று நோய்கள் பிரிவு  மருத்துவர்  Dr. Jerome Leis இன் கருத்துப்படி நோய் தொற்று பரவாமல் இருக்க தாம் எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்

மருத்துவமனை மருத்துவமனை வழமை போல் இயங்கும்