தனது நான்கு குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் மார்க்கம் நபர் தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டார்

 தனது தாயார், தந்தை, பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர்  2019 ஆம் ஆண்டில் மார்க்கம் வீட்டிற்குள் இறந்து கிடந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட 23 வயதான Menhaz Zaman நான்கு கொலைக் குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அவரது வழக்கறிஞர் Adele Monaco உறுதிப்படுத்தியுள்ளார்.

York பிராந்திய காவல் துறை அதிகாரி இது பற்றி கூறுகையில் கடந்த ஆண்டு  ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி, மேஜர் மெக்கென்சி டிரைவ் ஈஸ்ட் மற்றும் மார்க்கம் சாலையின் தென்மேற்கே உள்ள காஸில்மோர் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிகாரிகள் கிடைத்த தகவலின் படி சென்றதாகவும், வீட்டின் முன்பகுதியில் நின்ற ஒருவர் தங்களை உள்ளே செல்ல அனுமதித்தாகவும் அவர் பின்னர்  Menhaz Zaman என்று அடையாளம் காணப்பட்டதாவும், மேலும் வீட்டின் உள்ளே நான்கு பேர்களின் உடல்கள் தாம் கண்டதாவும் மேலும் தெரிவித்தார்  சிறிது நேரத்தில் Menhaz Zaman  கைது செய்யப்பட்டார்.

இணையதள வீடியோ விளையாட்டுகளை விளையாடும்போது சந்தித்த நபர்களுடன் கொலைகள் குறித்து ஜமான் செய்திகளை வெளியிட்ட பின்னர், இவருடன் இணையத்தளத்தில் விளையாடிக்கொண்டு இருந்தவர்கள் மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்ததாவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

இவர் எப்போதுமே மனஉளைச்சல் நிறைந்தவராகவும் பல்கலை படிப்பினை கைவிடப்போவதாகவும் அடிக்கடி சொல்லிவந்ததாக தெரிய வருகிறது

“நான் மனச்சோர்வடைய ஆரம்பித்தேன், இறுதியில் இந்த திட்டத்தை உருவாக்கினேன்,” என்று தான் கொலை செய்வதற்கு முதல் ஒரு பதிவினை பதிவேற்றம் செய்து இருந்தார்.

வியாழக்கிழமை, Sep23  திகதி  தன் மீது சுமத்தப்பட்ட  மூன்று முதல் தர கொலை குற்றச்சாட்டுகளையும் ஒரு இரண்டாம் நிலை குற்றச்சாட்டினையும்  ஒப்புக்கொண்டார்  அவரது வழக்கறிஞர் Adele Monaco இதனை தெரிவித்தார்

வரும் அக்டோபர் 26 திங்கள் அன்று இவருக்கு தண்டனை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது