தடையை மீறி பட்டாசு விற்பனை செய்தால் ரூ.10,000 அபராதம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கொரோனா பாதித்தவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், தடையை மீறி ராஜஸ்தானில் பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசு வெடிப்பவர்கள் அல்லது அதற்கு அனுமதி அளிப்பவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் ராஜஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.