தங்க கடன் வட்டி வீதம் குறைப்பு

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்றைய தினம் ஒன்று கூடியுள்ளது.

tiktamil.com

இதன் போது கடனட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கும் தங்கக்கடன் அடகு வட்டியை 10 வீதமாக குறைப்பதற்கும் இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

மேலும் வங்கி மேலதிக பற்றுக்கான வட்டி 16 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது.

சட்டரீதியான இருப்பு வீதம் 2 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.