டொரோண்டோ Downtown பகுதியில் இன்று இரண்டு ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன

டொரோண்டோ Downtown  பகுதியில்  இன்று இரண்டு ஆர்பாட்டங்கள் இடம்பெற்றன COVID-19 கட்டுப்பாடுகளுக்கு டவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் நகர மையத்தில் வீதிகளில் இறங்கி ஆர்பாட்டத்தினில்   ஈடுபட்டனர்

முகமூடி எதிர்ப்பாளர்களின் குழு பிரதம மந்திரி Justin Trudeau வுக்கு எதிராகவும் , அவரது அரசாங்கத்துக்கும் எதிராகவும் COVID-19 கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்துக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்பு பதாதைகளை தாங்கியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் Yonge-Dundas சதுக்கத்தில் ஒன்றுகூடிய பின்பு வடக்கு திசையில் Yonge தெரு வழியாக Davenport தெருவுக்கு சென்று அங்கிருந்து Avenue வீதி வழியே   Yonge Bloor. வீதியூடாக மீண்டும் Yonge-Dundas சதுக்கத்தை அடைவதன் மூலம் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது முடிந்தால் அந்த பகுதிகளைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை பொலீசார் வலியுறுத்தியிருந்தனர்

டொராண்டோவில் பல வாரங்களில் இது இரண்டாவது ஆர்ப்பாட்டமாகும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன.