டொரோண்டோ Downtown இல் வன்முறையில் ஈடுபட்டவர் பொலீசாரினால் கைது

டொரோண்டோ downtown பகுதியில் பாதசாரிகள் மீது வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டார்   ஞாயிற்றுக்கிழமை காலை downtown மையத்தில் ஒரு பெண்ணை தரையில் வீசி பலரைத் தாக்கிய 26 வயது டொராண்டோ நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலை 9:15 மணியளவில் தாக்குதலில் ஈடுபட்டவர் யோங்(Yonge) மற்றும் டன்டாஸ்(Dundas) வீதிகளின் சந்திப்பில் நடந்து சென்று, சந்திப்பில்  நின்ற ஒரு வாகனத்தின் மேல்பகுதியினை சேதப்படுத்தியதாகவும், பின்னர் அவர் டன்டாஸில் (Dundas)கிழக்கு நோக்கிச் சென்று, அங்கு அவர் ஒரு பெண்ணைப் பிடித்து தரையில் வீசி விட்டு,  சந்தேகநபர் மற்றொரு நபரை சைக்கிளில் குத்துவதற்கு முன்பு மற்றொரு நபரின் முகத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை தடுக்க முயன்ற பலரை தாக்கியதாகவும் பொலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 26 வயதுடைய Diamond Ekanem  பொலீசாரினால் கைது செய்யப்பட்டு அவர் மேல் பல  குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டன