டொரோண்டோ மாகாண முதல்வர் Doug Ford இன் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு COVID-19 தொற்று

டொரோண்டோ மாகாண முதல்வர் Doug Ford இன் தொகுதி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது 

Etobicoke வில் உள்ள முதல்வரின்  தொகுதி அலுவலகத்தில் பணிபுரியும் பல ஊழியர்கள் COVID-19 தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது

 டொராண்டோ பொது சுகாதாரத்தால் இந்த Covid -19 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆனாலும் எப்போது தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டன என்பதை மாகாண முதல்வரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை

தற்போது சுத்தம் செய்வதற்காக தொகுதி அலுவலகம் மூடப்பட்டுள்ளது கடந்த இரண்டு வாரங்களில். Doug Ford தொகுதி அலுவலகத்திற்கு விஜயம் செய்யவில்லை என்றும்

அவருக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும்  இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.