டொரோண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களின் முடக்க நிலை நீடிக்கப்படுமா?

ஒண்டாரியோ மாகாண அரசாங்கம் டொரோண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களின் முடக்கல் நிலைமை தொடர்பாக இன்று தனது முடிவினை அறிவிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது அதேபோல் டொரோண்டோ பெரும் பக்கத்தில் covid -19 தொற்றுகள் அதிகம் பரவும் பகுதிகள் ஒண்டாரியோ மாகாணத்தின்  stay-at home சட்டத்தில் இருந்து அடுத்த வாரம் விடுவிக்கப்படுமா என்பது குறித்தும் இன்று முடிவு எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

வெள்ளிக்கிழமை நடக்கும் அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து மாகாண அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்படும் என ஒண்டாரியோ மாகாண சுகாதார அமைச்சர் Christine Elliott நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

டொரோண்டோ மற்றும் பீல் பிராந்தியங்களை பெப்ரவரி 22 ம் திகதி முதல் நிற அடிப்படையிலான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மாகாண அரசு தீர்மானித்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் இந்த முடிவினை பின்போடுமாறும் மார்ச் மாதம் 9 ம் திகதி  நிலைமையினை

மீள்பரிசீலனை செய்து முடிவினை எடுக்குமாறு மாகாண அரசாங்கத்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்  

டொரோண்டோவின் முதன்மை மருத்துவ அதிகாரி Dr  Eileen de Villa  தான் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு மாகாணத்தின் முடக்கல் மற்றும்   stay-at-home  சட்டத்தினை நீடிக்குமாறு கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

டொரோண்டோ நகர பிதா John Tory தானும் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்க வேண்டும் என்ற கருத்தில் உடன்படுவதாகவும் தெரிவித்தார்

ஒண்டாரியோ மாகாணத்தில் Covid -19 தொற்றுகளின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றாலும் 348  london UK மாற்று வைரஸ்   B.1.1.7 தொற்றுகளும் 10  B 1.351 South Africa மாற்று வைரஸ் தொற்றுகளும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன