டொரோண்டோ மத்திய பகுதியில் கத்திக்குத்து சம்பவம்

டொராண்டோவின் முக்கோண சுற்றுப்புற சந்தி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த ஒரு விருந்தில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்தார்,காயம் காரணமாக பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். Dupont தெரு மற்றும் Campbell வீதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக கிடைத்ததாக தகவலை அடுத்து பொலீசார் அங்கு சென்றபோது கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த நிலையில் ஒருவர் காணப்பட்டார்.

இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக மெலிதான கட்டமைப்பைக் கொண்ட ஆண் சந்தேக நபரை பொலீசார் தேடி வருகின்றனர். அவர் சாம்பல் நிற ஸ்வெட்டர் அணிந்து காணப்பட்டார் மற்றும் சம்பவ இடத்திலிருந்து அவர் தப்பி ஓடிவிட்டதாகவும் பொலீசார் தெரிவிக்கின்றனர். தகவல் தெரிந்தவர்கள் காவல் துறையை அல்லது Crime Stopper இனை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.