டொரோண்டோ பீல் பிராந்தியங்களில் புதிய covid -19 கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என எதிர்பார்ப்பு

Covid -19 தொற்று மிகவும் வேகமாக பரவும் டொரோண்டோ பீல் பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும்போது அந்த பிராந்தியங்களில் உள்ள,உடற்பயிற்சி மையங்கள்,சிகை அலங்கரிப்பு நிலையங்கள் போன்றவற்றை முற்றாக 28 நாட்களுக்கு மூடுவது பற்றியும்   மற்றும் அந்த பிராந்தியங்களில் உள்ள shopping malls  களுக்கு வருவோரின் எண்ணிக்கையினை கட்டுப்படுத்துவது பற்றியும்  அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது  


மேலும் பிற நபர்களால் வீடுகளுக்கு சென்று செய்யப்படும் House Cleaning வேலையும் இடைநிறுத்தப்படும் எனவும் அறியப்படுகிறது தொற்றுநோய்களின் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான புதிய அதிகாரங்களும் தொற்றுநோய்களின் முன்னெச்சரிக்கைகளை மீறும் வகையில் நடப்பவர்களுக்கு   அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும் என மாகாண அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன
அதிகரித்துவரும் covid -19 பரவலை கட்டுப்படுத்த அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்டுகின்ற இந்த புதிய கட்டுப்பாடு நடைமுறைகள் வருகின்ற திங்கள் கிழமை  முதல் நடைமுறைக்கு வந்து நத்தார் தினத்துக்கு முதல் கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது