டொரோண்டோவில் 9தடுப்பூசி நிலையங்களில் COVID-19 தடுப்பூசி வழங்க திட்டம்

வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து டொரோண்டோ நகர சபையினால் நடத்தப்படும் தடுப்பூசி நிலையங்களில் Covid -19 தடுப்பூசி வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த தடுப்பூசி வழங்குவதனை நிர்ணயிக்கும் குழு நகரத்தில் உள்ள 9 இடங்களில் வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து  இந்த தடுப்பூசியினை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது 

Metro Toronto Convention Centre, Malvern Community Centre மற்றும்  Toronto Congress Centre இல் அமைந்துள்ள தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தடுப்பூசிகளை வழங்குவற்கு ஏற்கனவே தயாரான நிலையில் உள்ளன Scarborough Town Centre இன் தடுப்பூசி நிலையம் அடுத்த வாரமளவில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது பின்வரும் 9 இடங்கள் Covid -19 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதும்  தடுப்பூசிகளை வழங்கும் சேவையினை தொடங்கும் என Counselor  Joe Cressy தெரிவித்தார் 

  • Metro Toronto Convention Centre, 255 Front St. W.
  • Toronto Congress Centre, 650 Dixon Rd.
  • Malvern Community Recreation Centre, 30 Sewells Rd.
  • The Hangar, 75 Carl Hall Rd.
  • Scarborough Town Centre, 300 Borough Dr.
  • Cloverdale Mall, 250 The East Mall
  • Mitchell Field Community Centre, 89 Church Ave.
  • North Toronto Memorial Community Centre, 200 Eglinton Ave. W.
  • Carmine Stefano Community Centre, 3100 Weston Rd.

இந்த தடுப்பூசி நிலையங்கள் முழுமையாக இயங்க ஆரம்பித்ததும் வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும் என்றும் வாரம்தோறும் 120,000 COVID-19 தடுப்பூசிகள் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது