டொரோண்டோவில் புதிய Covid -19 கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றது

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் Covid -19 தொற்றுக்களை கட்டுப்படுத்த  இந்த வார இறுதியில் இருந்து  புதிய கட்டுப்பாடுகள் டொரோண்டோவில்  நடைமுறைக்கு வருகின்றன,அதேபோல் Peel பிராந்திய மேயர் குடியிருப்பாளர்களை எந்தவொரு கொண்டாட நிகழ்வுகளுக்காக ஒன்றுகூட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

Johns Hopkins  பல்கலைக்கழக ஆய்வு தரவுகளின் படி  கனடாவில் இதுவரை 9,751  COVID-19 காரணமாக இறந்துள்ளனர்,மொத்தமாக  193,600 பேர்  COVID-19  தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்

டிசம்பர் மாதத்தில் ஒண்டாரியோவில் Covid -19 தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில்  வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இருந்து ஒண்டாரியோ வண்ண குறியீட்டு கட்டுப்பாடு முறையில்  சிவப்பு நிறத்திலான கட்டுப்பாடு முறைக்குள் செல்லுகின்றது

இந்த சிவப்பு நிற கட்டுப்பாடானது ஒண்டாரியோவில் கடந்த வசந்த காலத்தில் இருந்த கட்டுப்பாடுகளை விட அதிகமாக இருக்கும்

இதன்படி உணவகங்களில் உள்ளிருந்து உணவருந்தல் தடைசெய்யப்பட்டுள்ளது,உடற்பயிற்சி மையங்கள் 10 பேருடன் மட்டுமே இயங்கலாம் ஆனால் உள்ளக உடற்பயிற்சி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

வீட்டில் இல்லாதவர்களுடன் பழகுவதை தவிர்க்கவும் , வேலை, பாடசாலை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிர்த்து முடிந்தவரை வீட்டிலேயே அனைவரையும் இருக்கவும் சுகாதார அதிகாரிகள்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.