டொரோண்டோவில் நாளாந்த உணவு வங்கிகளை நாடுவோர் அதிகரிப்பு

டொரோண்டோவில் செப்டம்பர் மாதத்தில் உணவு வங்கிகளில் இருந்து தமக்கென உணவுகளை பெற்றுக்கொணடவர்களின் தொகை 100,000 என்றும் இது கடந்த வருடத்தை விட 30,000  க்கும் அதிகமானவை என்று நாளாந்த உணவு வங்கியின்  தலைமை நிர்வாக அதிகாரி நீல் ஹெதெரிங்டன்(Neil Hetherington)தெரிவித்தார்

“இது நகரத்தில் வறுமையை அனுபவிக்கும் பலரின் கடுமையான தேவையின் அடையாளம்” என்றும் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, அதிக உழைக்கும் ஏழை குடியிருப்பாளர்கள் உணவு வங்கிகளை நம்பியிருப்பதாக தெரிவித்த அவர், மேலும் தொற்றுநோயின் இரண்டாவது அலைக்குள் இருப்பதால் அதிகமான எண்ணிக்கையிலான வணிகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் உணவு வங்கிகளை நாடுவோரின் தொகை மேலும் அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார்