டொரோண்டோவில் இன்று இரண்டு தொகுதிகளில் இடைதேர்தல்

கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி மந்திரி மற்றும் எம்.பி. பதவியில் இருந்து திடீரென ராஜினாமா  செய்த Bill மோர்னேவு வின் தொகுதியான Toronto மத்திய தொகுதியில் அவரின் இடத்தை நிரப்ப நடக்கும் இந்த தேர்தலில்   ஒன்பது வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர்.

லிபெரல் கட்சியின் சார்பில் முன்னாள் ஒலிபரப்பாளர் Marci Ien, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் Benjamin Gauri Sharma, NDP கட்சி சார்பில் Brian Chang, Peoples Party of Canada. சார்பில் Balijit Bawa,  இவர்களுடன் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  Green Party   தலைவர் Annamie Paul ஆகியோர் இந்த இடை தேர்தலில் போட்டியிடுகின்றனர்

இடை தேர்தல் நடக்கும் அடுத்த தொகுதியான York-Centre  தொகுதியில் கனடா மக்கள் கட்சி தலைவர் Maxime Bernier உட்பட 6 பேர் போட்டியிடுகின்றனர் கடந்த ஆகஸ்ட் மாதம் லிபெரல் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Michael Levitt தனது பதவியினை ராஜினாமா  செய்திருந்தார்

வாக்காளர்கள் தமது வாக்குகளை இன்று  காலை 8:30 மணி முதல்   இரவு 8:30 மணி வரை அளிக்க முடியும்