டொரோண்டோவில் இந்த வார இறுதியில் இருந்து மின்கட்டணங்கள் அதிகரிப்பு

டொரோண்டோவில் இந்த வார இறுதியில் இருந்து மின்கட்டணங்கள் அதிகரிக்க இருக்கின்றன covid -19  காலத்தில் இருந்த கட்டணங்களை  விட வாடிக்கையாளர்கள் சராசரியாக 2 சத அதிகரிப்பை தமது மின்கட்டண மாதாந்த கட்டுப்பண சீட்டில் அவதானிக்கமுடியும் என்று ஒன்ராறியோ எரிசக்தி வாரியம் தெரிவித்துள்ளது

இந்த வார தொடக்கத்தில் ஒன்ராறியோ எரிசக்தி வாரியம் புதிய மின்கட்டண அதிகரிப்பு நவம்பர் மாதம்  1  ம் திகதி முதல் வீடுகள் மற்றும் சிறு வணிகங்களுக்கான புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என அறிவித்து இருந்தது 

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து நடைமுறையில் இருந்த விசேட Covid -19 விலைகள் இந்த மாதத்தில் இருந்து முடிவுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுஇருந்தது