டொரோண்டோவில் அதிகரித்துவரும் COVID-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான COVID-19 நடைமுறைகள் எப்போது அமுலுக்கு வரும் ???

டொரோண்டோவில் அதிகரித்துவரும் COVID-19 தொற்று பரவலை கட்டுப்படுத்த கடுமையான COVID-19 நடவடிக்கைகளை அமல்படுத்த ஒண்டாரியோ மாகாண முதல்வர்  Doug Ford இன் அறிவிப்பினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக மேயர் John  Tory  தெரிவித்தார்

டொராண்டோவில் COVID-19 பரவுவதைத் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நகரத்தின் உயர் மருத்துவரின் கருத்துடன்  ஒத்துப்போகும் மேயர் John  Tory  மேலதிக கடுமையான COVID-19 நடைமுறைகளை அமுல் படுத்த மாகாண அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்றும் தெரிவித்தார்

.புதன்கிழமை, John  Tory மற்றும் நகரத்தின் உயர் மருத்துவர் Eileen de Villa புதிய Covid-19 எண்ணிகைகளை   வெளியிட்டனர், மேலும் கடுமையான பாதுகாப்பு முறைகளை அமுல் படுத்தாவிடின் Covid-19 தொற்று பரவல் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்

இன்று ஒண்டாரியோவில் பதியப்பட்ட 797 புதிய தொற்றுக்கள் மிகவும் கவனத்துக்கு எடுத்து கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்தார்