டொராண்டோ பள்ளிவாசலுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கை

டொரொன்டோ பொலிசார் இந்த வார இறுதியில் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றுக்கு எதிராக விடுக்கப்பட்ட கொலை கொலை மிரட்டல் எச்சரிக்கை  தொடர்ப்பாக விசாரித்து வருகின்றனர்

நியூஸிலாந்து இல் இடம்பெற்ற பள்ளிவாசல் கொலைச்சம்பவம் போல் இங்கும் நடக்கும் என தங்களுக்கு கொலை மிரட்டல் எச்சரிக்கை வந்ததாக கனடிய தேசிய முஸ்லீம் சபை விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

நியூஸிலாந்து பள்ளிவாசலில் 2019 ஆண்டு நிகழ்ந்த சம்பவத்தில் 51 பேர் கொல்லப்பட்டுஇருந்தனர் 

கடந்த மாதம் டொராண்டோ பள்ளிவாசலுக்கு வெளியே குத்திக் கொல்லப்பட்ட 58 வயதான மொஹமட்-அஸ்லிம் ஜாபிஸின் மரணத்திலிருந்து டொராண்டோவின் முஸ்லீம் சமூகம் இன்னும் மீளவில்லை எனவும்  கனடிய தேசிய முஸ்லீம் சபை விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

டொரோண்டோ பொலீசார் email மூலம் அனுப்பப்பட்ட இந்த கொலை மிரட்டலை தங்கள் விசாரிப்பதாகவும் மிகவும்  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்