டொராண்டோ பொது நூலக 8 கிளைகளில் COVID-19 தொற்று

தொடர்ந்து அதிகரித்துவரும் COVID-19 தொற்றுகள் காரணமாக ஒண்டாரியோவின் யார்க் (york)பிராந்தியமும் வரும் திங்கள்கிழமை முதல் மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகளுக்கு மீண்டும் வர இருகின்றது.

ஏற்கனேவே COVID-19 தொற்றுகளின் தாக்கம் காரணமாக டொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவா ஆகிய பிராந்தியங்கள் மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகளுக்கு கொண்டுவரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் கூறுகிறது.

புதிய மாற்றியமைக்கப்பட்ட  2ம் நிலைகட்டுப்பாடுகள் ஒக்டோபர் மாதம் 19  திகதி திங்கட்கிழமை அதிகாலை 12:01 மணிமுதல்அமுலுக்கு வரும்.

உணவுச்சாலைகளில் உள்ளக உணவருந்தல்,உடற்பயிற்சி மையங்கள்,சூதாட்ட விடுதிகள் போன்றவற்றிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.