டொராண்டோ பொது நூலக 8 கிளைகளில் COVID-19 தொற்று

டொராண்டோ பொது நூலகம்  தனது பல்வேறு கிளைகளில் 10 பேருக்கு  COVID-19 தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.GTA யில் உள்ள   அதன் எட்டு நூலகக் கிளைகளில் 10 பேர்  இந்த COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.ஐந்து ஊழியர்களும் நூலகத்துக்கு வருகை தந்த 5 பேருக்கும்  COVID-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்வரும் கிளைகளில்  COVID-19 தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது.

•Lillian H. Smith

•Richview

•Guildwood

•Goldhawk Park

•Maria A. Shchuka

•Northern District

•St. Lawrence

•Toronto Reference Library

COVID-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் 14 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், பணியிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பு அறிகுறி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்றும் நூலகம் குறிப்பிட்டுள்ளது.