டொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவிற்கான மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருகின்றது

டொராண்டோ, பீல் மற்றும் ஒட்டாவாவிற்கான மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகளை ஒன்ராறியோ அரசாங்கம் அறிவித்துள்ளது

COVID-19 தொற்றுகள்  மாகாணத்தில் வேகமாக அதிகரித்து வருவதால், மாகாண  அரசாங்கம் டொராண்டோ, பீல் பிராந்தியம் மற்றும் ஒட்டாவா போன்ற  வேகமாக பரவும் பிராந்தியங்களில் தேர்ந்து எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நிலை 2 கட்டுப்பாடுகள் குறைந்தபட்சம் 28 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அனைத்து சமூகக் கூட்டங்களுக்கான  எண்ணிக்கையினை குறைப்பதாகவும், பொது நிகழ்வுகளில்  அதிகபட்சமாக 10 பேர்  உள்ளரங்க நிகழ்வுகளிலும், 25 பேர் வெளிப்புற நிகழ்வுகளிலும் அரசாங்கம் கூறுகிறது. ஆனால் இரண்டு நிகழ்வுகளை இணைத்து கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருக்கின்றது

புதிய நடவடிக்கைகள் அக்டோபர் 10 சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும்.