2 ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் நோக்கியா…

Nokia 2.4 and 3.4 appear on Nokia Mobile India website | Nokiamob

நோக்கியா நிறுவனம் இந்திய சந்தையில் விரைவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் அறிமுகம் ஆகியுள்ள நிலையில் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன்கள் நோக்கியா இந்தியா வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இவற்றின் இந்திய வெளியீட்டு திகதி ஏதும் தெரிவிக்கப்படவில்லை.