டெல்லியில் மோசமடையும் காற்று மாசு…. மக்கள் அவதி!

தலைநகர் டெல்லியில் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும் காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்படும். இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே காற்று மிகவும் மாசுபட்டு உள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் அறுவடைக்காலம் முடிவடைந்துள்ளதையடுத்து, அதிகளவு வைக்கோல் வயலில் எரிக்கப்படுவதால் டெல்லியின் பல பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது.  

இன்று காலை நிலவரப்படி  டெல்லியின் ஆனந்த்விஹார் பகுதியில் காற்றின் தரக்குறியீடு 405 ஆக இருந்தது. இது மிகவும் மோசமான நிலை ஆகும். டெல்லியில். ல்வேறு பகுதிகளிலும் காற்றின் தரம் மோசமாகவே இருந்ததாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், அக்சர்தம், இந்தியா கேட் உள்ளிட்ட பகுதியில் காற்றின் தரக்குறியீடு 370 ஆக பதிவானதாக தகவல், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காற்றில் மாசுவின் அளவை குறைக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனங்களை ‘ஆப்’ செய்யுமாறு மாநில அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. இருப்பினும் மாசு குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறார்கள்.