டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த விஷேட செயற்திட்டம்

காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவு கிராமிய சுகநல மேம்பாட்டுக்குழுவின் ஒழுங்கமைப்பில் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் (20) வவுனியா ஸ்ரீராமபுரம் மற்றும் அண்ணாநகர் ஆகிய கிராமங்களில் இந் நிகழ்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.

இக் கிராமங்களில் உள்ள டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான திண்மக்கழிவு பொருட்களை வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினரின் ஒத்துழைப்புடன் அகற்றும் பணியும் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு இக்கிராமங்களில் நேற்றைய தினம் பொதுமக்களுக்கு குறித்த கழிவுப்பொருட்களை சேகரிப்பதற்கான மையங்கள் தொடர்பான தகவல்கள்      மற்றும்  ஒருங்கிணைப்பு , மக்களுக்கு அறிவுறுத்தும் பணிகளில் கிராம அலுவலர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பட்டதாரிபயிலுனர்கள் ஆகியோர்  இணைந்து மேற்கொண்டிருந்தனர். இதன்  பிரகாரமே குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.