’டிரம்ப் மோசடி செய்து படித்தவர்’ – மேரி டிரம்ப் குற்றச்சாட்டு

டிரம்ப் குறித்து அவரின் உறவினர் எழுதிய புத்தகத்தில் டிரம்ப் ஒரு ‘சுயமோகி (narcissist)’ எனவும், அவரால் ஒவ்வொரு அமெரிக்கரின் வாழ்வும் அச்சுறுத்தலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டிரம்பின் அண்ணன் மகளான மேரி டிரம்பின், “டூ மச் அண்ட் நெவர் எனஃப்: ஹவ் மை ஃபேமிலி க்ரியேடட் தி வேல்ட்ஸ் மோஸ்ட் டேஞ்சரஸ் மேன்” (Too Much and Never Enough: How My Family Created the World’s Most Dangerous Man) புத்தகத்தில் டிரம்ப் ஒரு ‘மோசக்காரர்’ என்றும், ‘அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு நபர்’ என்றும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் வரும் கூற்றுகளை வெள்ளை மாளிகை மறுக்கிறது. மேலும் இந்த புத்தகத்திற்கு தடை செய்ய வெள்ளை மாளிகையால் தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியில் முடிந்தது.

எனவே இந்த புத்தகம் ஜூலை 14ஆம் தேதி வெளியானது.