டிசம்பர் மாதம் ஒண்டாரியோவில் 6500 Covid 19 தொற்றுகள் ஒரு நாளில் பதிவாகலாம் மருத்துவ அதிகாரிகள் எதிர்பார்ப்பு

ஒண்டாரியோ மாகாணத்தில் வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இருந்து ஒரு நாளைக்கு 6000 பேர் விகிதம் Covid -19 தொற்றுக்கு உள்ளவர்கள் என ஒண்டாரியோ அரசாங்கம் இன்று வெளியிட்ட மதிப்பீட்டில் தெரிவிக்கப்படுள்ளது 

மேலும் இந்த Covid -19 இரண்டாவது அலையின் பரவல் வளர்ச்சி விகிதம் 3 விகிதமாக இருக்கும் வரையில் டிசம்பர் நடுப்பகுதியில் Covid -19 இன் ஒரு நாள் தொற்றுகளின் எண்ணிக்கை 2500 ஆகவும், பரவல் விகிதம் 5 விகிதமாக இருக்குமாகில் ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கை 6500 ஆக அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த கணிப்பீடுகளை மேற்கொண்ட அதிகாரிகளில் ஒருவரான Dr. Adalsteinn Brown தற்போதய பரவல் விகித நிலை  தொடருமாக இருந்தால் ஒண்டாரியோவில் டிசம்பர் மாதத்தில் 5 விகித Covid -19 தொற்று  அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்

Covid -19 தொற்றின் பரவல் விகிதம் அதிகமாக காணப்படும் Peel,Toronto பிராந்தியங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் Covid -19 தொற்றுகளின் எண்ணிக்கையினை குறைக்கமுடியும் எனவும் தெரிவித்தார் 

சில நாட்களுக்கு முன்பு  Covid -19 தொற்றுகளின்  நாள் வளர்ச்சி விகிதம் ஐந்து சதவீதமாக இருந்தது. இது இப்போது ஆறு சதவீதமாக உள்ளது, மேலும்  ஒன்ராறியோவின் Covid -19   நாளாந்த தொற்றுகளின்  எண்ணிக்கை ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் இத்தாலி ஆகிய நாடுகளின் நாளாந்த Covid  19 எண்ணிக்கையினை விட அதிகரிக்கலாம் எனவும் அதிகாரி Dr. Adalsteinn Brown ஊகம் வெளியிட்டுள்ளார்