டாடா ஸ்கை பயனர்களுக்கு ஒரு நற்செய்தி!

டாடா ஸ்கை நிறுவனம் நாட்டில் உள்ள அதன் அனைத்து அகன்ற அலைவரிசை திட்டங்களுக்குமான போஸ்ட் ஃபேர் யூசேஜ் பாலிசி (FUP) லிமிட் ஸ்பீட்டை அதிகரித்துள்ளது, அதாவது குறிப்பிட்ட திட்டத்தின் டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர் பயனர்கள் பெறும் டேட்டாவின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் தனது வரம்பற்ற அகன்ற அலைவரிசை திட்டங்களுக்கு இந்த அப்டேட்டை நிகழ்த்தியுள்ளது.

இதன் மூலம், பயனர்கள் 3Mbps பிந்தைய FUP வேகத்துடன் இணையத்தில் உலாவ முடியும். முன்னதாக, டேட்டா தீர்ந்தவுடன் நிறுவனம் 2Mbps வேகத்தை வழங்கியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.