ஜோ பிடனுக்கு சஜித் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்ற ஜோ பிடனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது  ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்கவுள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்க  ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பிடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிசுக்கும்  ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோன்று, சஜித் பிரேமதாசவும் ஜோ பிடனுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்து அறிக்கையில், ‘உங்கள் வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்’ என அவர்  குறிப்பிட்டுள்ளார்.