ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியுஸ் போஸ்டர் வெளியீடு!

நடிகர் ஜெய் நடிக்கும் புதிய படமான பிரேக்கிங் நியுஸ் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெய் சில ஆண்டு இடைவெளிகளுக்குப் பிறகு இப்போது பிஸியாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அதில் சுசீந்தரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் இரண்டு படங்களும் அடக்கம். இந்நிலையில் இப்போது ஜெய் நடிக்கும் புதிய படமான பிரேக்கிங் நியுஸ் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்க பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படப்பிடிப்பை மொத்தமாக முடித்துள்ள படக்குழு போஸ்ட் புரடஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம்.