ஜெயம் ரவியின் பூமி ஓடிடி ரிலிஸ்… விநியோகஸ்தர்களால் மிகப்பெரிய சிக்கல்!

OTT platform | OTT மேடையில் வெளியிடப்படுமா ஜெயம் ரவியின் பூமி? | Movie News  in Tamil

பூமி படத்தை ஓடிடி தளத்தில் ரிலிஸ் செய்வதற்கு எதிராக ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லக்‌ஷ்மண் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பூமி’. விவசாயத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் விவசாயம் செய்யும் ஹீரோவாகவே நடித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்தில் நிதி அகர்வால் நாயகியாகவும், சதீஷ் நண்பர் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இமான் இசையமத்துள்ளார். சென்னை எக்ஸ்பிரஸ், சிங்ஹம் உள்ளிட்ட பிரபல இந்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டுட்லீ இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். விவசாயத்தை மையமாக கொண்டு சமூக கருத்து பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ள இந்த படம் லாக்டவுன் இல்லை என்றால் ரிலிஸ் ஆகி இருக்கும்.

இப்போது தியேட்டர்கள் திறப்பது குறித்து உறுதியான தகவல் இல்லை என்பதால், இந்த படத்தையும் ஓடிடியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த படம் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக 30 கோடி ரூபாய்க்கு பூமி படத்தை விலைபேசியுள்ளது தயாரிப்பு தரப்பு.

ஆனால் இப்போது படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் விநியோகஸ்தர்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். ஏற்கனவே இந்த படத்தை 12 கோடி கொடுத்து வாங்கிய விநியோக நிறுவனம், அதை வேறு சில நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தொகையை லாபமாக வைத்து கைமாற்றி விற்றுள்ளது. அதனால் இப்போது அவர்களிடம் இருந்து வாங்க வேண்டுமென்றால் 18 கோடி ரூபாயைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாம். இதனால் 6 கோடி ரூபாய் கைவிட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார் பூமி பட தயாரிப்பாளர்.